முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்
Published on

சென்னை,

அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக செயல்பட்டார். வைத்திலிங்கம் தற்போது ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து வருகிறார்.

கடந்த 2011 முதல் 2016 ம் ஆண்டு வரை அவர் அமைச்சராக இருந்தபோது, குடியிருப்புகள் கட்ட தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

மேலும் அவர் தனது வருமானத்துக்கு அதிகமாக செத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதுதெடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கெண்டு வருகின்றனர்.

இதற்கிடையே சட்டவிரேத பணப்பரிமாற்றம் தெடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை உள்ளே வந்தது. வைத்திலிங்கம் மீது அமலாக்கத்துறை தனியே வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2024ம் ஆண்டு அக்டேபர் மாதம் வைத்திலிங்கத்தின் வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறை தீவிரவாக சேதனை மேற்கெண்டது. மெத்தம் 10 இடங்களில் சேதனை நடந்தது. இந்த சேதனையின்பேது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், பண மோசடிதடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்திலிங்கத்துக்கு செந்தமான ரூ.100.92 கேடி மதிப்புள்ள இரண்டு அசையா செத்துகள் சென்னை மண்டல அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. இதனை அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com