கோவையில் போதைப்பொருட்கள் விற்ற 4 பேர் கைது!

4 பேரிடமிருந்தும் புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது
Published on

கோவை,

கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

4 பேர் கைது

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் இருகூர் பகுதியில் ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நவீன் (21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், போத்தனூர் சாரதா மில் ரோடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற விக்னேஷ் (24) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

மேலும், கோயம்புத்தூர் செட்டி வீதி டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற கிணத்துக்கடவைச் சேர்ந்த பஞ்சலிங்கம் (28) என்பவரை பஜார் வீதி போலீசாரும், கோவைப்புதூர் காலி மைதானத்தில் மது விற்ற ரங்கசாமி (48) என்பவரை குனியமுத்தூர் போலீசாரும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரிடமிருந்தும் புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com