திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் பலியான இந்துமதி, செந்தில்நாதன், முகிலன், குருநாதன்.
விபத்தில் பலியான இந்துமதி, செந்தில்நாதன், முகிலன், குருநாதன்.
Published on

வேளாண்மை அலுவலர்

சென்னை மேடவாக்கம் விமலா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 49), சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடைய மனைவி இந்துமதி (41). இவர் சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில், வேளாண்மைஅலுவலராக பணி புரிந்துவந்தார். இவர்களது மகன் முகிலன் (16). இந்த நிலையில் செந்தில்நாதன் தனது குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் நடந்த உறவினர் திருமண விழாவுக்கு நேற்று காலை காரில் சென்றிருந்தார். அவர்களுடன் செந்தில்நாதனின் அண்ணன் ரெயில்வே ஐ.சி.எப்.பில் பணிபுரிந்து வந்த கொளத்தூர் லட்சுமி நகரை சேர்ந்த குருநாதன் (54) என்பவரும் சென்றிருந்தார்.

4 பேர் பலி

பின்னர் விழா முடிந்ததும் அவர்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர். காரை செந்தில்நாதன் ஓட்டிச் வந்தார். அந்த கார், திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதியம் 12.30 மணியளவில் திண்டிவனம் அடுத்த பாதிரி என்ற இடத்தில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் செந்தில்நாதன், இந்துமதி, முகிலன், குருநாதன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com