வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி: மின்வாரிய ஊழியர் கைது

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த மின்வாரிய ஊழியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி: மின்வாரிய ஊழியர் கைது
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மின்வாரிய ஊழியர் ஒருவர் மோசடி செய்துள்ளார்.

பவானி சிங்கம்பேட்டையை சேர்ந்த மின்வாரிய ஊழியர் மூர்த்தி, மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக 25 பேரிடம் ரூ.1.25 கோடி பெற்று மோசடிசெய்துள்ளதாக புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் அவரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com