மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
Published on

தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருவையாறு எம்.எல்.ஏ.வுமான துரை.சந்திரசேகரன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உலகநாதன், அருளானந்தசாமி, முருகானந்தம், முரசொலி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, மாவட்ட, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஆலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com