திருநெல்வேலியில் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

திருநெல்வேலியில் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
திருநெல்வேலியில் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
Published on

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல்துறை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் உடல் பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, கண்பார்வை பரிசோதனை, பல் மருத்துவ ஆலோசனை, ரத்த அழுத்த பரிசோதனை, எலும்பு தாது அடர்த்தி, ஹீமோகுளோபின் அளவு, ஆக்சிஜன் அளவு, இதய பரிசோதனை, வெரிகோஸ் மற்றும் சிறுநீரக கல்லடைப்பு போன்ற பரிசோதனைகள் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஆகியோர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com