இலவச பொது மருத்துவ முகாம்

இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இலவச பொது மருத்துவ முகாம்
Published on

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் திருத்தங்கலில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம்கள் நடந்தது. மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி வனராஜா, யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல் வரவேற்றார். நிகழ்ச்சியில் மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர் குருசாமி, கவுன்சிலர் திருப்பதி, தி.மு.க. நிர்வாகிகள் திலீபன் மஞ்சுநாத், ஆலாவூரணி வெங்கடேசன், மாரீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை விருதுநகர் வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சண்முகராஜன், தலைவர் செல்வராணி ஆகியோர் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com