அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள்

கொரடாச்சேரி அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார்
அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள்
Published on

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றார். இதில், பள்ளி தலைமையாசிரியர் பூந்தமிழ்பாவை மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் உடனிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com