பெரம்பலூரில் 12-ந் தேதி முயல் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்

முயல் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் பெரம்பலூரில் 12-ந் தேதி நடக்கிறது.
பெரம்பலூரில் 12-ந் தேதி முயல் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்
Published on

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட செங்குணம்- கைகாட்டி எதிரே உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் முயல் வளர்ப்பு குறித்த இலவச நாள் பயிற்சி முகாம் வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் முயல் இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணிக்கு மேல் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 9385307022 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், பயிற்சியில் கலந்து கொள்ள வரும்போது ஆதார் எண் தெரிவிக்க வேண்டும் என கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com