சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்; அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் இன்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்; அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை
Published on

சென்னை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, சென்னையின் கிண்டி பகுதியில் திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் இன்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com