

சென்னை,
விமான நிலையம் முதல் வங்கிகள் வரை, இன்று (செப்டம்பர் 1ம் தேதி) முதல் சில முக்கிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.
* அந்த வகையில், வெளிநாடு செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் குடியுரிமை கவுன்டர்களில் போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை. மின்னணு அல்லது அச்சிடப்பட்ட போர்டிங் பாசை காண்பித்தால் போதும்.
* அதேபோல், எல்.பி.ஜி. இணைப்பில் இ-கே.ஒய்.சி. செய்யாவிட்டால் வீட்டு உபயோக சிலிண்டரை சலுகை விலையில் பெற முடியாது. இதனால், செப்டம்பர் மாதத்திற்கான எல்.பி.ஜி. சிலிண்டர் விலை மாற வாய்ப்பு இருக்கிறது.
* மேலும், ரூ.3 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட வைப்பு தொகைகளுக்கான வட்டி விகித விவரங்களை ஒவ்வொரு நாளும் வங்கிகள் காலை 10.10 மணிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
ஒரே நாளில் ஒரே தொகைக்கான வைப்பு தொகைக்கு வெவ்வேறு கிளைகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்க முடியாது. வட்டி விகிதங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது.