தமிழகத்தில் இன்று முதல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள மாநிலங்களில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளது. இன்று முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கல்லூரிக்கு பணிக்கு திரும்புமாறு உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com