காதலி பேசாததால் விரக்தி: தூக்குப்போட்டு என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

கண்டமனூர் அருகே காதலி பேசாததால் விரக்தியடைந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலி பேசாததால் விரக்தி: தூக்குப்போட்டு என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
Published on

தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே அம்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் நித்திஷ்குமார் (வயது 18). ஆண்டிப்பட்டி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், தேனி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்திஷ்குமாருக்கும், அவரது காதலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதன் காரணமாக அந்த பெண் நித்திஷ்குமாரிடம் பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கண்டமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் நித்திஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com