எரிபொருள் நெருக்கடி: தமிழக கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கை குறைப்பு

தமிழக கவர்னர் அர்லேகர் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி: தமிழக கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கை குறைப்பு
Published on

சென்னை,

மேற்காசிய போர் நெருக்கடியை கருத்தில் கொண்டு எரிபொருள் பயன்பாட்டை குறைத்து சிக்கனமாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று பீகார் முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி மற்றும் மராட்டிய முதல்-மந்திரி தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கையை குறைத்து கொண்டனர். டெல்லி அரசும் அனைத்து அரசுத்துறை ஊழியர்களும் வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழக கவர்னர் அர்லேகர் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார்.

தற்போது எரிபொருள் சிக்கனத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அரசு, தனியார் நிகழ்ச்சிகளுக்கு கவர்னர் செல்லும்போது 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பெட்ரோல், டீசம் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com