மார்கழி மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி உண்டு.
மார்கழி மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
Published on

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி உண்டு. இரவு நேரத்தில் பக்தர்கள் கோவில் வளாகப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com