ஜெருசலேம் புனித பயணத்துக்கான நிதியுதவி ரூ.60 ஆயிரமாக உயர்வு - அரசாணை வெளியீடு

ஜெருசலேம் புனித பயணத்துக்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை ரூ.60 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஜெருசலேம் புனித பயணத்துக்கான நிதியுதவி ரூ.60 ஆயிரமாக உயர்வு - அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆர்.கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையில், ஜெருசலேம் புனித பயணத்துக்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.37 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும், என அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அந்த மானிய தொகையை உயர்த்தி வழங்குமாறும், அதனை செயல்படுத்தும் வகையில் தேவையான கூடுதல் நிதி ரூ.11.5 லட்சத்தை 2021-22-ம் நிதியாண்டில் திருத்திய மதிப்பீட்டில் உரிய கணக்கு தலைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.

இந்த கோரிக்கை ஆய்வு செய்யப்பட்டு ஜெருசலேம் சென்றுவர நிதி உதவி அளிக்கும் திட்டத்தின்கீழ் அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு மட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதியுதவியைரூ.37 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com