இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.வீரபாண்டியன்

அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மு.வீரபாண்டியன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை அழைத்துச் சென்று, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமையில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ள நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

இந்நிகழ்வு குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.சரவணன் என்பவரும் காவல்துறையில் புகார் அளிக்கக் கூடாது என மிரட்டியதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இக்குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும், பாதுகாப்பும் வழங்கிட வேண்டும்.

பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com