புழல் சிறையில் கஞ்சா, செல்போன்கள் பறிமுதல் - 11 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு

புழல் சிறையில் சிறைக் காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டதில், கஞ்சா, செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

புழல் சிறையில் கஞ்சா, செல்போன்கள் வைத்திருந்ததாக 11 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை மற்றும் தண்டனை சிறைகளில் உள்ள சிறைக் காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டதில், கைதிகள் மறைத்து வைத்திருந்த 50 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சிறைக் கைதியை பார்க்க வந்த மகேஷ் என்பவர், சோப்பிற்குள் மறைத்து வைத்து கஞ்சாவை கொடுக்க முயன்றார். அவரிடமிருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com