திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் கருடசேவை திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் கருடசேவை திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் கருடசேவை திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

108 திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 15-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் சாமி காலை, மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை என பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தங்க கருடவாகனத்தில், மேளதாளங்கள் முழங்க பெருமாள் எழுந்தருளினார். சாமி முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வழியெங்கும் பெருமாளுக்கு கற்பூர தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. கருடசேவை திருவிழாவில் திருப்புட்குழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். மாலை அனுமந்த வாகனத்தில் விஜயராகவ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com