செந்துறையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்; இன்று நடக்கிறது

செந்துறையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.
செந்துறையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்; இன்று நடக்கிறது
Published on

அரியலூர் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் எரிவாயு (கியாஸ் சிலிண்டர்) நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் செந்துறை தாசில்தார் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கின்றனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com