மண்டபம் கடற்கரையில் ஒதுங்கிய கியாஸ் சிலிண்டர்: போலீசார் விசாரணை

கரை ஒதுங்கி கிடந்தது காலியான கியாஸ் சிலிண்டர் என்பது தெரியவந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காந்திநகர் அருகே தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று கியாஸ் சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், சிலிண்டரை சோதனை செய்தனர். இதில் கரை ஒதுங்கி கிடந்தது காலியான கியாஸ் சிலிண்டர் என்பது தெரியவந்தது.
இந்த கியாஸ் சிலிண்டர் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சென்ற பெரிய கப்பல்களில் இருந்தோ அல்லது மீன்பிடி படகில் இருந்தோ தவறி கடலில் விழுந்து கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் காற்று மற்றும் கடல் நீரோட்ட வேகத்தால் இந்த பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து சிலிண்டரை கைப்பற்றி கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






