கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு லட்டு பிரசாரம் நிறுத்தம்

வணிக கியாஸ் சிலிண்டர்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் திருவண்ணாமலை கோவிலில் லட்டு தயாரிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டுகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படுவதுடன், முறுக்கு, அதிரசம், எல்லடை ஆகிய பிரசாதங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

Also Read
சட்டமன்ற தேர்தல்: சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
கோப்புப்படம்

இந்த நிலையில், தற்போது ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால், வணிக கியாஸ் சிலிண்டர்கள் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், திருவண்ணாமலை கோவிலில் இலவச லட்டு தயாரிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம், பக்தர்களுக்கு இலவசமாக லட்டு தயாரித்து வழங்குவதை நிறுத்தியுள்ளது.

Also Read
முன்னாள் அமைச்சர்களின் உருவ பொம்மைகளுக்கு செருப்பு மாலை - திமுக பேச்சாளர் கைது
கோப்புப்படம்

மேலும், விற்பனைக்காக தயார் செய்யப்படும் முறுக்கு, அதிரசம், எல்லடை ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்து, விறகு அடுப்பு மூலம் லட்டு தயாரிக்க அரசின் அனுமதியை கோவில் நிர்வாகம் கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தவுடன் விறகு அடுப்பு மூலம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read
‘கள்ளை’ போதைப்பொருள் என்று தடை செய்துள்ள அரசு டாஸ்மாக்கில் விற்பது என்ன புனித தீர்த்தமா? - சீமான் கேள்வி
கோப்புப்படம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com