பாதாள சாக்கடை பணிகளை ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு

பாதாள சாக்கடை பணிகளை ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாதாள சாக்கடை பணிகளை ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு
Published on

சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் 187 மற்றும் 188 ஆகிய வார்டுகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 124 சாலைகளில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 40 சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்காலிகமாக சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல, 84 தெருக்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி முடிவுற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் தற்காலிக சாலை அமைக்கும் பணியை மக்களுக்கு இடையூறு இல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும். இதரப் பணிகளையும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து முடித்திட வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com