விஸ்வரூபம் எடுக்கும் ஜெம் வீரமணி வழக்கு: பணப் பரிமாற்றம் குறித்து விசாரிக்க களமிறங்கும் அமலாக்கத்துறை?

அனைத்து அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
விஸ்வரூபம் எடுக்கும் ஜெம் வீரமணி வழக்கு: பணப் பரிமாற்றம் குறித்து விசாரிக்க களமிறங்கும் அமலாக்கத்துறை?
Published on: 

சென்னை,

ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, இந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமலாக்கத்துறை திட்டம்

ஜெம் வீரமணி மீதான பாலியல் புகாரை மூடி மறைக்கவும், வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைமாறியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதாகத் தெரிகிறது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இதற்கான விசாரணையைத் தொடங்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கைது நடவடிக்கை

மாநில காவல்துறை ஏற்கனவே இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆ.ர் பதிவு செய்துள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்க அமலாக்கத்துறைக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது. குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட பணம் அல்லது குற்றத்தை மறைக்க பயன்படுத்தப்பட்ட பணம் குறித்து விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டிவருகிறது.

இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்ய லஞ்சம் பெற்றதாக கூறப்படும் அனைத்து அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. முறையற்ற பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் அல்லது முகாந்திரம் கிடைத்தால், சம்பந்தப்பட்ட அரசு மற்றும் காவல் அதிகாரிகளை அமலாக்கத்துறை கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உயர் அதிகாரிகளுக்கு சிக்கல்

இதுவரை போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு குற்றவியல் வழக்காக பார்க்கப்பட்ட ஜெம் வீரமணி வழக்கு, தற்போது பணப்பரிமாற்ற புகாரால் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது வழக்கை கையாண்ட பல உயர்மட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பெரும் சிக்கலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை இந்தவழக்கை முறைப்படி கையில் எடுக்கும் பட்சத்தில், பல அதிரடி திருப்பங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் அரங்கேறலாம் எனத் தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com