உலக அளவில் டிரெண்ட் ஆகும் 'கெட் அவுட்' ஹேஷ்டேக்; சமூகவலைதளத்தில் மோதும் திமுக, பாஜகவினர்


உலக அளவில் டிரெண்ட் ஆகும் கெட் அவுட் ஹேஷ்டேக்; சமூகவலைதளத்தில் மோதும் திமுக, பாஜகவினர்
x
தினத்தந்தி 21 Feb 2025 11:35 AM IST (Updated: 21 Feb 2025 12:31 PM IST)
t-max-icont-min-icon

'கெட் அவுட் மோடி', 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஷ்டேக்கள் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குமேல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

அந்த வகையில், மும்மொழிக்கொள்கையை தமிழ்நாடு அமல்படுத்தவில்லையென்றால் கல்விநிதி கிடையாது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திரபிரதான் கூறினார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமான நிலையில் மொழி தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், மும்மொழிக்கொள்கை விவகாரத்தில் திமுக, பாஜகவினர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்பினரும் 'கெட் அவுட்' என தொடங்கும் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

எக்ஸ் வலைதளத்தில் 'கெட் அவுட் மோடி' என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பாஜகவை திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதேவேளை, இதற்கு பதிலடியாக 'கெட் அவுட் ஸ்டாலின்' என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, திமுகவை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கள் தற்போது உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

1 More update

Next Story