கடலூர் கோடை விழாவில் 2 சிறுமிகள் மாயம்

கடலூர் கோடை விழாவில் 2 சிறுமிகள் மாயமானாகள். இதுகுறித்து போலீசா விசாத்து வருகின்றனா.
கடலூர் கோடை விழாவில் 2 சிறுமிகள் மாயம்
Published on

கடலூர் திருவந்திபுரம் சாலைக்கரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி ரேணுகா (வயது 21). இவர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடக்கும் கோடை விழாவையொட்டி சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்காக சம்பவத்தன்று இரவு தனது அக்காள் மகள்கள் சவுந்தர்யா (9), தாமரைசெல்வி (9) ஆகியோருடன் பெரியார் அரசு கலைக்கல்லூரி அருகில் தங்கியிருந்தார்.

பின்னர் நள்ளிரவில் எழுந்து பார்த்த போது சிறுமிகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகா தனது உறவினர்களுடன் பல்வேறு இடங்களில் சிறுமிகளை தேடி பார்த்தார். இருப்பினும் சிறுமிகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரேணுகா, கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 சிறுமிகளையும் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com