சிறுமி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு

விருத்தாசலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு
Published on

விருத்தாசலம்,

கம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் தாய், தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டனர். இதனால் பாட்டியின் வளர்ப்பில் இருந்து வந்த சிறுமியை விருத்தாசலத்தை அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சநாதன் மகன் குருபிரசாத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் குருபிரசாத் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com