சிறுமியிடம் சில்மிஷம்

நாச்சியார்கோவில் அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சிறுமியிடம் சில்மிஷம்
Published on

திருவிடைமருதூர்;

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி ஒரு ஆட்டை காணவில்லை என்று தேடி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வடகரை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் சதீஷ் (வயது30) சிறுமியின் ஆடையை பிடித்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி சத்தம் எழுப்பினார். அப்போது அங்கு வந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமியை மீட்டு நாச்சியார் கோவில் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சதீசை கைது செய்தனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com