வேளாங்கண்ணிக்கு வேலை தேடி வந்த சிறுமிகள்.. இளைஞர்கள் செய்த வக்கிர செயல்

2 சிறுமிகளும் படிக்க பிடிக்கவில்லை என்று வீட்டில் கோபித்துக்கொண்டு வேளாங்கண்ணிக்கு வேலை தேடி வந்துள்ளனர்
பாலியல் தொல்லை
Published on: 

நாகப்பட்டினம்,

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 2 மீனவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமிகள் 2 பேர் படிக்க பிடிக்கவில்லை என்று வீட்டில் கோபித்துக்கொண்டு வேளாங்கண்ணிக்கு வேலை தேடி வந்துள்ளனர். அங்கு கடலில் குளித்த சிறுமிகள் இருவரும் பின்னர் கரையில் அமர்ந்துள்ளனர். அந்தவேளை அங்கு வந்த மீனவர்கள் அஜய்(வயது 27), விஷால்( வயது 23) ஆகிய இருவரும் சிறுமிகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.

பின்னர், வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேரலாயம் கேன்டீன் அருகே 2 சிறுமிகளும் தனியாக இருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் மாவட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிங்கப்பெண் போலீஸ் படை சப்-இன்ஸ்பெக்டர் வைத்தீஸ்வரி தலைமையிலான போலீசார் அங்கு சென்று அந்த சிறுமிகளை மீட்டு வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமிகளுக்கு 2 மீனவர்கள் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து அஜய்(வயது 27), மற்றும் விஷால்( வயது 23) இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். வேலை தேடி வந்த சிறுமிகளுக்கு மீனவர்கள் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com