திருநெல்வேலியில் சாலையில் கிடந்த தங்க வளையல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உரிமையாளரிடம் ஒப்படைப்பு


திருநெல்வேலியில் சாலையில் கிடந்த தங்க வளையல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உரிமையாளரிடம் ஒப்படைப்பு
x

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேல் ரோந்து பணிக்கு சென்றபோது, சீவலப்பேரி பகுதியில் சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை கண்டுள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேல் நேற்று (15.5.2025) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீவலப்பேரி பஜாரில் உள்ள டீக்கடையின் அருகே குழந்தைகள் அணியும் வகையில் சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை கண்டுள்ளார். உடனடியாக அந்த வளையலை எடுத்து, அவர் பணியாற்றும் சீவலப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்த வளையல் மேலபூவாணி, வடக்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ராஜாராம் என்பவருடையது என்று உறுதி செய்யப்பட்டது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வரச் சொல்லி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேல், ராஜாராம் தவறவிட்ட தங்க வளையலை சட்டப்படி உறுதி செய்த பின் அவரது வசம் ஒப்படைத்தார். இந்த நேர்மையான செயல்பாடு குறித்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தகவல் அறிந்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பாராட்டினார்.

1 More update

Next Story