மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

ஆண்டிப்பட்டி அருகே மூதாட்டியிடம் தங்கி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
Published on

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 63). இவர் நேற்று முன்தினம் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்திற்கு அவரது தாய் லட்சுமியம்மாளை பார்க்க வந்தார். அவர் ரெங்கசமுத்திரம் விலக்கில் பஸ்சில் இறங்கி நேருஜி காலனி கருப்புசாமி கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து வைகை அணை போலீசில் விஜயலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com