ஆசிரியையிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

ஆசிரியையிடம் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
ஆசிரியையிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
Published on

மலைக்கோட்டை:

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் ராஜேஸ்வரி ரெசிடென்சியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி ஹரிணி (வயது 24). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த பணியை முடித்துவிட்டு, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடைக்கு தனது தோழி மேனகாவுடன் ஸ்கூட்டியில் சென்றார். சஞ்சீவி நகரை அடுத்த ஒரு ஓட்டல் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஹரிணி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஹரிணி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com