தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 14 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.2,120 குறைந்துள்ளது.

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.73,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com