

சென்னை
தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) முழுவதும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது. ஆனால் பெரும்பாலான நாட்கள் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்வை நோக்கியே செல்கிறது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.664 குறைந்து, ரூ. 45,536க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,692க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 நாட்களில் ரூ. 1280 வரை உயர்ந்த நிலையில் ரூ. 664 குறைந்துள்ளது.
ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ. 1.30 குறைந்து ரூ.82.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.