

சென்னை,
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.260-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 80-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 680-க்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 440-க்கும் விற் பனை செய்யப்பட்டது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் எகிறி இருந்தது. கிராமுக்கு ரூ.20-ம், கிலோவுக்கு ரூ.20 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இன்றைய தங்கம் விலை:-
இந்தநிலையில் சென்னையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,860க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை:-
வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
23.02.2026 ஒரு சவரன் - 1,18,880 (இன்று)
21.02.2026 ஒரு சவரன் - 1,17,440 (நேற்று முன்தினம்)
20.02.2026 ஒரு சவரன் ரூ.1,15,360 (நேற்று)
19.02.2026 ஒரு சவரன் - . 1,16,000
18.02.2026 ஒரு சவரன் - . 1,13,840