தங்கம் விலை அதிரடி உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை அதிரடி உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 755-க்கும், பவுன் ரூ.70 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8 ஆயிரத்து 710-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து பவுன் ரூ.69 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.109 ஆகவும், கிலோவுக்கு ரூ.1 லட்சத்து 9 ஆயிரமாகவும் இருந்தது. இது நேற்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.108-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,930-க்கு விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com