தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.136 உயர்வு

ஒரு கிராம் தங்கம் ரூ.4,639-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.136 உயர்வு
Published on

சென்னை,

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 அதிரடியாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து ரூ.37,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,639-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ.66.80-க்கு விற்பனை ஆன நிலையில் இன்று 40 காசுகள் உயர்ந்து ரூ.67.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com