

சென்னை,
இந்த திட்டத்தை பாசமிகு மதுரையில் தொடங்கி வைக்க வரும் தமிழக முதல்-அமைச்ச்ர் விஜய்க்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் சுமார் 4.20 லட்சம் பச்சிளங் குழந்தைகளின் விரல்களில் தவழும் இந்த தங்க மோதிரம் வெறும் தங்கம் அல்ல; நம் குடும்பப் பிணைப்பையும், பெண்களின் தாய்மையையும் போற்றும் உணர்வுபூர்வமான தாய் மாமனின் பாச அடையாளம்.
இந்த திட்டத்தை பாசமிகு மதுரையில் தொடங்கி வைக்க வரும் தமிழக முதல்-அமைச்ச்ர் விஜய்க்கு வாழ்த்துக்கள்!
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சகோதரிகளின் மடியில் தவழும் மழலைகளுக்குப் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் தருவதோடு, எளிய குடும்பங்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் உயர்த்தும் இந்த உன்னத திட்டத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி, நாளை மதுரையில் பெருமகிழ்ச்சியோடு கலந்து கொள்கிறேன்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.