திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவர் எடுத்துவந்த ஜூஸ் மிக்சருக்குள் ரூ.1.83 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
Published on

திருச்சி,

திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானம் ஒன்றில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதனால் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பயணி ஒருவர் எடுத்துவந்த ஜூஸ் மிக்சருக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 2.579 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.83 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com