பழனி முருகன் கோவிலில் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து

பழனி மலை முருகன் கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி முருகன் கோவிலில் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து
Published on

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி மலை முருகன் கோவிலில் இன்று (ஏப்ரல் 10) முதல் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்படுகிறது.

பழனி முருகன் கோவிலுக்கு சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கிலும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். நாளை பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ள நிலையில், ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் தங்கத்தேர் புறப்பாடு இன்று முதல் 4 நாட்களுக்கு நடைபெறாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com