அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி ராஜாவின் பணி சிறக்கட்டும்" -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி ராஜாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி ராஜாவின் பணி சிறக்கட்டும்" -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமானம் செய்துவைத்தார். அவர் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் வாழ்த்துச்செய்தியில்;

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சகோதரர் டி.ஆர்.பி.ராஜா

அவர்களின் பணி சிறக்கட்டும்.

எம்.எல்.ஏ. - மாநில திட்டக்குழு உறுப்பினர் - திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் என பல்வேறு நிலைகளில் திறம்பட பணியாற்றி வரும் ராஜா அவர்கள், அமைச்சராகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு கழக அரசிற்கும் - தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com