ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் அடைத்த காவல் ஆணையரின் உத்தரவு ரத்து - சென்னை ஐகோர்ட்

ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் அடைத்த காவல் ஆணையரின் உத்தரவு ரத்து - சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை,

கொலை, கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சி.டி.மணி கடந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஜூன் 26ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

மகன் மணி மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தந்தை பார்த்தசாரதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆவணங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ் நகலை முறையாக வழங்கவில்லை;

சில பக்கங்களில் தெளிவு இல்லை எனக்கூறி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் அடைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்ததவை ரத்து செய்து உத்தரவிட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com