தமிழகத்தில் அக்டோபர் 2-ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த அரசு அறிவுரை

தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 2-ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த அரசு அறிவுரை
Published on

சென்னை,

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ந்தேதி தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அக்டோபர் 2-ந்தேதி கிராம சபைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேச உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி வரவு செலவு கணக்குகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ந்தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com