தரமற்ற முறையில் அரசு கட்டிடங்கள் கட்டினால் சிறையில் அடைக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு காட்டம்

சேதமடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்து, புதிய நூலகக்கட்டிடம் கட்டவும், அதுவரை தற்காலிக இடத்தில் நூலகம் செயல்படவும் உத்தரவிட வேண்டும்.
மதுரை ஐகோர்ட்டு
Published on: 

மதுரை,

தரமற்ற முறையில் அரசு கட்டிடம் கட்டினால் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் காட்டமாக கூறினர்.

நூலக கட்டிடம் சேதம்

மதுரையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அரசு கிளை நூலகம் 36 ஆயிரம் புத்தகங்கள், 3,410 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு சுமார் 7.5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நூலகக் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைநீர் உள்ளே புகுந்து புத்தகங்கள் சேதமடைவதுடன், மின் இணைப்புகளும் பாதிக்கப்பட்டு உள் ளன. குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை.

எனவே சேதமடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்து, புதிய நூலகக்கட்டிடம் கட்டவும், அதுவரை தற்காலிக இடத்தில் நூலகம் செயல்படவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பலவீனமானது ஏன்?

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நூலகத்தின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது.

அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என வாதாடினார். அப்போது நீதிபதிகள், 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம், அதற்குள் பலவீனமா னது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

சிறையில் அடைக்க வேண்டும்

பின்னர் நீதிபதிகள் கூறுகையில், தரமற்ற அரசு கட்டிடங்களை கட்டுபவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என தங்களது அதிருப்தியை காட்டமாக வெளிப்படுத்தினர். இதுபோன்ற தரமற்ற கட்டுமான பணிகள் இனியும் நடைபெறக்கூடாது. கட்டுமானத்தில் தவறு செய்யும் என்ஜினீயர்கள், காண்டிராக்டர்கள் பொறுப்பேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், சம்பந்தப்பட்ட நூலக கட்டிடத்தை கட்டிய என்ஜினீயர், காண்டிராக்டர் ஆகியோர் இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

X