கோவை: அரசு பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து - போதை ஆசாமி வெறிச்செயல்.

மேட்டுப்பாளையத்தில் போதை ஆசாமி ஒருவர் அரசு பஸ் டிரைவரை கத்தியால் குத்தியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: அரசு பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து - போதை ஆசாமி வெறிச்செயல்.
Published on

கோவை:

கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை 1 ல் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூருக்கு பெரிய புத்தூர் வழியாக டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று (ஆகஸ்ட் 20) இரவு 7.35 மணிக்கு மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து அன்னூருக்கு டவுன் பஸ் புறப்பட்டது.

சிறுமுகை அருகே உள்ள மீனம்பாளையத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் டிரைவர் ஆகவும் கணேசன் என்பவர் நடத்துனர் ஆகவும் பணியில் இருந்தனர். பஸ் நிலையத்திலிருந்து பஸ் வெளியே வந்த போது நடு ரோட்டில் ஒரு போதை ஆசாமி நின்று கொண்டு டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே இறங்கி வாடா என்று மிரட்டியதாக தெரிகிறது.

உடனே டிரைவர் அருணாசலம் பஸ்சை விட்டு கீழே இறங்கி 'ஏன் நடுரோட்டில் நின்று கொண்டு தகராறு செய்கிறாய், பஸ்சின் குறுக்கே ஏன் நிற்கிறாய், வழிவிட்டு ஓரமாகச் செல்' என்று கூறியதாக தெரிகிறது. உடனே போதை ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டிரைவர் அருணாச்சலத்தின் கை மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியதாக தெரிகிறது.

இதை சற்றும் எதிர்பாராத டிரைவர் அலறி அடித்து சத்தம் போடவே அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் போலீசார் மற்றும் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com