அரசு பேருந்தில் தவெக பெயர்: போக்குவரத்து துறை விளக்கம்..!

விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிப் பெயர் ஒளிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசு பேருந்தில் தவெக பெயர்: போக்குவரத்து துறை விளக்கம்..!
Published on

சென்னை,

TN45 M4853 என்ற பதிவெண் கொண்ட தமிழக அரசு பேருந்து ஒன்றின் மின்னணு வழித்தட பலகையில், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிப் பெயர் ஒளிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கம் அளித்து போக்குவரத்து துறை கூறி இருப்பதாவது;

’சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில் உள்ள பேருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், திருச்சி மண்டலத்தைச் சேர்ந்தது. இப்பேருந்தின் மின்னணு வழித்தட பலகையில் இடம்பெற்ற வாசகங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், யாரோ மர்ம நபர்கள் வழித்தட பலகையின் மென்பொருளை (Motherboard) ஹேக் (Hack) செய்து, இத்தகைய வாசகங்களை பதிவிட்டது கண்டறியப்பட்டது.

இச்சம்பவம் கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக அந்த மின்னணு பலகையின் மதர்போர்டு மாற்றப்பட்டு, சரியான வழித்தட விவரங்கள் பதிவேற்றப்பட்டது. இது போன்ற செயல்கள் இனி நிகழாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மின்னணு பலகை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’

என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com