தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது - ஐகோர்ட்டு

சுங்க சாவடிகளுக்கான நிலுவை தொகை ரூ.276 கோடியை அரசு போக்குவரத்துக்கழகம் செலுத்தவில்லை.
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது - ஐகோர்ட்டு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.276 கோடியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக கூறி மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டுர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், 'சுங்கச்சாவடிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி , கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகள் வழியாக 10-ந் தேதி முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக்கூடாது.இந்த சுங்க சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com