அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
Published on

கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 13-வது மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் வரவேற்புரையாற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் ஞானத்தம்பி தொடக்க உரையாற்றினார். கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு அறிவிக்கும் தேதியில் வழங்கிடவும், முடக்கப்பட்ட சரண் விடுப்பை அனுமதித்திடவும் வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உரிய வீட்டு வாடகை படி, நகர ஈட்டுபடி அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com