அரசு பணியாளர் சங்க கூட்டம்

நாகையில் அரசு பணியாளர் சங்க கூட்டம் நடந்தது
அரசு பணியாளர் சங்க கூட்டம்
Published on

நாகை மாவட்ட அரசு பணியாளர் சங்க அலுவலகத்தில், மாவட்ட அரசு பணியாளர் சங்கத்தின் மாவட்ட மைய தேர்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட தலைவராக வெற்றிசெல்வன், செயலாளராக மகேந்திரன், பொருளாளராக சந்திரசேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மண்டல இணை பதிவாளரை இடமாற்றம் செய்ய தொடர்ந்து போராடிய சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது. டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை நாகை மாவட்டத்தில் வைக்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர் ஒருவரை தற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்து செய்து பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com