துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு அதிகாரம்: இடைக்காலத்தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு


துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு அதிகாரம்: இடைக்காலத்தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு
x

பல்கலை. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை,

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக அரசின் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பவர் பாஜகவைச் சேர்ந்தவர், இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. விடுமுறைக்கால அமர்வில் இதனை அவசர வழக்காக மாலை 6 மணி வரை விசாரிப்பதில் அவசியம் என்ன? என்று வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.

இதனைத்தொடர்ந்து அரசு பதில் அளிக்க அவகாசம் தராமல் விசாரணை நடத்துவது முறையற்ற செயல், நியாயமானது இல்லை என தமிழ்நாடு அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தடை விதித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 More update

Next Story